Friday 3rd of May 2024 09:28:54 AM GMT

LANGUAGE - TAMIL
-
வவுனியா ஈச்சங்குளத்தில் விபத்து! இருவர் படுகாயம்!

வவுனியா ஈச்சங்குளத்தில் விபத்து! இருவர் படுகாயம்!


வவுனியா ஈச்சங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்தநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றுமாலை வவுனியா நகரிலிருந்து ஈச்சங்குளம் பகுதிநோக்கி மோட்டார்சைக்கிளில் பயணித்த இருவர் ஈச்சங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அவர்களது மோட்டார்சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியது.

விபத்தில் படுகாயமடைந்த இளைஞர்கள் நீண்டநேரமாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்படாமல் வீதியில் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் குறித்த வீதியூடனான போக்குவரத்து சிலமணிநேரங்கள் தடைப்பட்டிருந்தது

விபத்துதொடர்பாக அவசர அம்புலன்ஸ் சேவைக்கு பொதுமக்கள் தகவல் வழங்கியுள்ளனர்.

எனினும் நீண்டநேரமாக அம்புலன்ஸ் வராத நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு முச்சக்கரவண்டியூடாக குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், வவுனியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE